technology

img

5-வது சுற்றுவட்டப் பாதையில் உயர்த்தப்பட்டது சந்திரயான் - 3!

சந்திராயன்-3 பூமியின் இறுதி (5-வது) சுற்றுவட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.

நிலவின் பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வு நடவடிக்கையில் இன்று வெற்றிகரமாக ஐந்தாவது சுற்றுப் பாதையிலும் நிலைநிருத்தப்பட்டதாக பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் வடிவமைக்கப்பட்டது. கனரக செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஜூலை 14-இல் 1-வது சுற்றுவட்டப்பாதையில் 173 கிலோ மீட்டா் அருகாமை தொலைவிலும், 41,762 கிலோ மீட்டா் தொலை தூரத்திலும் செலுத்தப்பட்டது.

ஜூலை 17-இல் 2-வது சு சுற்றுவட்டப்பாதையில் 226 கிலோ மீட்டா் அருகாமை அருகாமை தொலைவிலும், 41,603 கிலோ மீட்டா் தொலை தூரத்திலும், அதன் தொடா்ச்சியாக கடந்த 18 ஆம் தேதி ம3-வது சுற்றுவட்டப்பாதையிலும், ஜூலை 20-இல் 4-வது சுற்றுவட்டப்பாதையிலும், இன்று 5-வது சுற்றுவட்டப்பாதையில்  நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து  வருகிற ஆகஸ்ட் இல் புவிவட்டப் பாதையில் இருந்து நிலவின் வட்டப்பாதைக்குள் பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

;